மாலை நேர ஸ்நாக்ஸ் அரிசி வடை :


Posted by-Kalki Teamஉளுந்து வடை, பருப்பு வடை என்று சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் அரிசி மாவில் வடை செய்தால் சூப்பராக இருக்கும். இன்று அரிசி மாவில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி - 1 கப்

தேங்காய் - அரை மூடி

பச்சை மிளகாய் - 4

சின்ன வெங்காயம் -10

தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து, இடியாப்ப மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

தேங்காயை துருவிக்கொள்ளுங்கள்.

பச்சை மிளகாய், வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் அரைப் பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த கலவையை அரிசி மாவு கலவையில் சேர்த்து, உப்பு வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை வட்டவடிவில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

மாவில் தண்ணீர் அதிகமானால் எண்ணெய் காலியாகி விடும்… கவனம்!

சூப்பரான அரிசி வடை ரெடி.


Post Comment

Post Comment