மக்கள் செல்வன் - விஜய்சேதுபதிக்கு புதிய பட்டம்!


Posted by-Kalki Teamவிஜய்சேதுபதி பெரிதாக பந்தா பண்ணாத நடிகர். பல வெற்றிகளை சந்தித்தபோதும் இப்போதுவரை அடக்க ஒடுக்கமாகத்தான் நடந்து கொண்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால் படப்பிடிப்பு தளங்களில் தன்னை விட சீனியர் நடிகர் நடிகையர் அமர்ந்திருந்தால் அவர்கள் முன்பு உட்காரவே தயங்குகிறாராம். அந்த அளவுக்கு மரியாதையாக நடந்து கொண்டு வருகிறாராம். இதை அவருடன் நடித்து வரும் நடிகர்கள்

சொல்கின்றனர்.இந்நிலையில, இதுவரை தனது பெயருக்கு முன்பு எந்தவித பட்டத்தையும் அவர் சூட்டிக்கொள்ளாதபோதும், சேதுபதி படத்தின் கட்அவுட்களில் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் அவருக்கு சின்ன தல என்ற பட்டத்தை கொடுத்து பிரமாண்டப்படுத்தி வருகின்றனர். ரசிகர்களின் விருப்பம் அது என்பதால் அதை விஜய்சேதுபதியும் ஏற்றுக்கொண்டு விட்டார்.

இதற்கிடையே தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் படங்களை அடுத்து விஜய்சேதுபதியை மீண்டும் தர்மதுரை படத்தில் இயக்கிக்கொண்டி ருக்கும் சீனுராமசாமியும் தற்போது அவருக்கு மக்கள் செல்வன் என்றொரு பட்டத்தை சூட்டியிருக்கிறாராம். தர்மதுரையில் இந்த பட்டத்துடன்தான் விஜய்சேதுபதியின் பெயர் இடம்பெறப்போகிறதாம். அதோடு, இனிமேல் இந்த பட்டத்தைதான் சூட்டிக்கொள்ள வேண்டும் என்றும் விஜய்சேதுபதிக்கு அன்பான கட்டளை போட்டுள்ளாராம் சீனுராமசாமி. விஜய்சேதுபதியும் அதற்கு ஓகே சொல்லியிருக்கிறார்.


Post Comment

Post Comment