ஆண்கள் இயற்கையான முறையில் தங்கள் அழகை பாதுகாக்க...!


Posted by-Kalki Teamஆண்கள் அதிகமா வெயிலில் சுத்துவதால் தூசு பட்டு முகத்தில் அழுக்குகள் ஒட்டி சில பேருக்கு எண்ணைய் சருமமா இருக்கும். அதற்கு ஸ்கரப் பயன்படுத்தலாம். எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் சிறிது சர்க்கரை தொட்டு அதை முகத்தில்

தோய்த்து சிறிது நேரம் விட்டு கழுவுங்கள் முகம் பொழிவாக மாறிவிடும். கற்றாழை சாற்றை சிறிது பாலுடன் கலந்து முகத்தில் தேய்த்து குளித்தால் சரும வறட்சி மறைந்து முகம் பொழிவாக ஜொலிக்கும். அடுத்தடுத்து சிலருக்கு சருமம் வறட்சியா இருக்கும் ஷேவ் செய்வதால் முகத்தில் எரிச்சல் ஏற்பட்டு அது சிலருக்கு கருமை நிறமா மாறிவிடும். ஆண்கள் தாடி அடர்த்தியா வளர ஆசை படுவார்கள்.

அவங்க தாடியில் சிறிது விளக்கெண்ணெயை தோய்த்தால் போதும் தாடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். கண் கருவளையம் உள்ள ஆண்கள் கருவளையம் போக வாழைப்பழ தோலின் உள் பகுதியை கண்களுக்கு மேலே ஒரு பத்து நிமிடங்கள் வைக்கவும். அப்படி இல்லை என்றால் தோலின் உள்பகுதியை எடுத்து கண்களுக்கு அடியில் வைத்து மஜாஷ் பண்ணுங்க சில ஆண்களுக்கு முகத்தில் தோன்றும் கொப்புளங்களை நீக்க வாழைப்பழ தோல் ரொம்ப உதவியாக இருக்கும்.

வாழைப்பழ தோலை கொப்பளம் உள்ள இடத்தில் நன்கு தேய்த்தால் கொப்பளம் சீக்கிரமாக மறைந்து விடும். முகம் சோர்வு அடையாமல் இருக்க அடிக்கடி முகத்தை கழுவிகொள்ளுங்கள்.


Post Comment

Post Comment