பிராணயாமம் மன அழுத்தத்தை குறைக்கும் :


Posted by-Kalki Teamபிராணயாமம் மூலமாக, மன அழுத்தம் குறைகிறது, அக்னி தூண்டப் பெறும், செரிமானம் சரியாக நடக்கும். சுவாசம் மூலம் நுழையும் பிராணவாயு, உடல் முழுவதும், திசுக்களுடன் ஊடுருவிக் கலக்கிறது.

பிராணவாயு என்னும் உயிர்ச்சக்தியே மனித உடல் உயிருடன் இயக்கக் காரணம் ஆகிறது. சுவாசம் மூலம் நுழையும் பிராணவாயு, உடல் முழுவதும், திசுக்களுடன் ஊடுருவிக் கலக்கிறது.

பிராணயாமம் மூலமாக, மன அழுத்தம் குறைகிறது, அக்னி தூண்டப் பெறும், செரிமானம் சரியாக நடக்கும். கழிவுகள் வெளியேற்றம் இயல்பாக நடக்கும், உடலிலுள்ள சக்திப்பாதைகளின் உயிரோட்டத்தையும், உயிர்ப்பையும் பாதுகாக்கிறது. மனதை அமைதிப்படுத்துவதன் மூலமும், தெளிவாக்குவதன் மூலமும், சூட்சும சக்திப் பாதைகளைத் தூண்டி, இதய நலத்தைக் காக்கிறது.

(இட, பிங்கள, சூட்சும நாடிகள்,பிராணவகநாடி, மனோவகநாடி, ரசவாக நாடி போன்றவை). பிரணாயாமம் நன்கு பழக்கமான பின்பு, நாடி சோதனையை (இடது வலது மூக்குத் துவாரங்கள் வழியே மாற்றி மாற்றிச் சுவாசிப்பது) முயற்சிக்கலாம். இதனால் இட, பிங்கள நாடிகள் நேரடியாகப் பயன் பெறுகின்றன.

மன அழுத்தம் குறைய, உயிர்சக்தியைக் காக்க, மேம்பட்ட மனநிலை பெற இவை உதவுகின்றன.

யோகா

யோகாவும் மேற்சொன்ன பயிற்சிகளைப் போலவே, இதயத்துக்கு, நேர்மறைத் தாக்கத்தைத் தருகின்றது, மன அழுத்தம் குறைய, கழிவுகள் தேங்காமல் இருக்க, ரத்த ஓட்டம் மேம்பட, உடல் முழுதும் உள்ள திசுக்கள், மன, உணர்வுக்கோளங்கள் நலம்பெற உதவுகிறது. இதய நோய் ஏதும் இல்லாத நிலையில், தினமும் ஆறிலிருந்து பத்து சூரிய நமஸ்காரம் செய்வது இதயத்துக்கு நன்மைபயக்கும் என்பர்.

தியானம் / பிரார்த்தனை

ஆழ்மனதின் சூட்சும வழிகளைத் தூண்டுவதன் மூலம், மிகவும் சவாலான சூழ்நிலைகளுக்கு நாம் இயல்பாக காட்டும். ரெஸ்பான்சைக்கூட மாற்றி அமைக்கலாம். மனநலம் காக்கப்படும். உணர்வுகளின் சமநிலை சீரமைக்கப்படும். பிராணவாயு உடலில் சீராகப் பரவ உதவும். அதன் மூலம் செரிமானம் சரியான எண்ணங்கள், சரியான உணர்வுகள் அமைய உதவும், மூன்று தோஷங்களையும் சமநிலைப் படுத்தும், ஓஜசை மேம்படுத்தும். ஆகவே, ஏற்கனவே தியானப் பயிற்சி இல்லாவிடில், அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் தியானம் பழகுவது நல்லது.

ருத்திராட்சம்

நமது கலாசாரத்தில் இதற்கு உயர்ந்த இடம் இருக்கிறது. தியானம் மேம்பட உதவும், இதயச்சக்கரம் திறக்க உதவும், இதை மாலையாக அணியலாம், இரவில் நீரில் போட்டுவைத்து காலையில் அந்த நீரை அருந்தலாம். ருத்திராட்சம் அணிய பல நெறிமுறைகள் உள்ளன. ஒருமுகம்,இருமுகம், ஆறுமுகம் எனப் பலவகைகள் இருந்தாலும் அவை அனைத்தின் குணமும் ஒன்றுதான்.


Post Comment

Post Comment