"நீதிக்கதை" ;


Posted by-Kalki Teamஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார்.

அவை மேலே பறக்கும் பலூன்கள்.

அவர் பலூன்களில் காற்றடைத்து விற்பதை ஒரு சிறுமி கவனித்துக் கொண்டிருந்தாள்.

மெல்ல பலூன்காரரிடம் வந்தாள்.

இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா? என்று கேட்டாள்.

ஓ… பறக்குமே. என்ன விஷயம்?

பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா? என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி.

சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை.

ஏம்மா கேக்குற?

இல்ல, பலூன் கறுப்பு கலர்ல இருந்தாகூட பறக்குமா?

பலூன்காரருக்கு இப்போது விஷயம் புரிந்தது. அந்தச் சிறுமியின் நிறம் கறுப்பு.

பலூன் மேல போறதுக்குக் காரணம் அதோட கலர் இல்லம்மா. உள்ள இருக்கிற வாயுதான். என்ன கலர்னாலும் உள்ள இருக்கிறது சரியா இருந்தா, யார் வேண்டுமானாலும் உயரலாம் என்றார்.

நீதி: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது.


Post Comment

Post Comment