சூப்பரான ஸ்நாக்ஸ் வேர்க்கடலை உருண்டை :


Posted by-Kalki Teamகுழந்தைகளுக்கு வேர்க்கடலை உருண்டை என்றால் மிகவும் பிடிக்கும். இந்த வேர்க்கடலை உருண்டையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வேர்க்கடலை - 1 கப்

வெல்லத் தூள் - 1 கப்

ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :

வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு வறுத்து, தோல் நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.

வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து, கெட்டிப்பாகு காய்ச்சுங்கள்.

பாகு பதம் வந்தவுடன் வேர்க்கடலையைக் கொட்டிக் கிளறுங்கள். நன்றாகக் கலந்ததும் வேறு பாத்திரத்துக்கு மாற்றுங்கள்.

கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு வேர்கடலை கலவை சற்று சூடாக இருக்கும் போதோ சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். நன்றாக ஆறிய பின்னர் காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

சூப்பரான வேர்க்கடலை உருண்டை ரெடி.


Post Comment

Post Comment