தனுசுடன் செல்பி எடுக்க முண்டியடித்த கல்லூரி மாணவர்கள்!


Posted by-Kalki Teamதமிழ் சினிமாவில் விஜய்-அஜீத்துக்குத்தான் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர் என்றாலும், தனுசுக்கும் ஒரு கணிசமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் அவர் வெளியூர்களுக்கு படப்பிடிப்புக்கு செல்லும்போதும் அவரை ரசிகர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுவரை சிங்கிள் ரோல்களில் மட்டுமே நடித்து வந்த தனுஷ், தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்து வரும் கொடி படத்தில் அண்ணன்-தம்பியாக நடிக்கிறார். அதுவும் படம் முழுக்க கரை வேஷ்டி கட்டிய தாடி வைத்த அரசியல்வாதியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு, முதன்முறையாக இப்படத்தில் திரிஷாவும் தனுசுடன் நடித்திருக்கிறார். அவரும் அரசியல்வாதியாகவே நடித்திருக்கிறார். அதனால் தனுஷ்-திரிஷா இருவருமே எதிரும் புதிருமான வேடங்களில் நடித்து வருவதாக சொல்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது கொடி படப்பிடிப்பு கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்து வருகிறது. அங்கு முதல்நாள் படப்பிடிப்பை நடத்தியபோது ஏராளமான மாணவர்கள் ஸ்பாட்டில் குவிந்து விட்டார்களாம். தனுசுடன் செல்பி எடுப்பதில் நான் நீ என்று முந்திக்கொண்டு அவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் அன்றைய தினம் படப்பிடிப்பு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதாம். அதனால், இப்போது பகல் நேரங்களில் படப்பிடிப்பு நடத்தாமல், கல்லூரி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு மாலை 6 மணிக்கு மேல் அந்த கல்லூரி வளாகத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறதாம்.


Post Comment

Post Comment