ஜக் ஜங்கா.. 26ம் தேதி மாலை பெங்களூரில் அசத்தல் இசை நிகழ்ச்சி


Posted by-Kalki Teamபெங்களூர்: ரகு தீக்சித்... இந்திய நாட்டுப்புற இசையையும் மேற்கத்திய இசையையும் கலந்து ஜுகல்பந்தி செய்து அசத்தும் கலைஞன்.

இந்தியாவின் பல மொழிகளின் நாட்டுப்புற இசை குறித்தும் ஆராய்ச்சி செய்து வரும் இவர், அந்த இசையை தனது ஆல்பங்களில் மிக லாவகமாக வெஸ்ட்டர்ன் இசையோடு கலந்து அடிக்கும் மனிதர்.

எம்.டி.வின் கோக் ஸ்டுடியோவில் பல மாநில இசைக் கலைஞர்களோடு இவர் வழங்கிய இசை நிகழ்ச்சிகள் மிகப் பிரபலமானவை. இந்தியாவின் அனைத்து முன்னணி இசை சேனல்களிலும் இவரது ஆல்பங்கள் தவறாமல் இடம் பெற்று வருகின்றன.

2010ல் இவரது Wrasse Records ஆல்பம் இங்கிலாந்தின் டாப் 1 இடத்தைப் பிடித்தது.

ரகு தீக்சித் இந்தியா மட்டும் இன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத் முன்பும் பாடிய பெருமை ரகு தீக்சித்திற்கு உண்டு. பல மொழிகளில் பாடும் ரகு தீக்சித் மற்றும் அவரது குழுவினர் எங்கு சென்றாலும் அவர்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து விடுவார்கள்.

2013ல் இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிட்ட ,Jag Changa ஆல்பமும் மிகப் பிரபலம். அந்த வீடியோ இதோ https://www.youtube.com/watch?v=_ippqFoi_y4

இந் நிலையில் இவரது இசை நிகழ்ச்சி பெங்களூரில் நடக்கவுள்ளது. பனசங்கரி 2வது ஸ்டேஜில் உள்ள பி.என்.எம்.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வரும் 26ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

இக் கல்லூரியின் வருடாந்திர டெக்னாலஜி திருவிழாவான தத்வாவின் ஒரு பகுதியாக தீக்சித்தின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடக்கும் இடம்:

பி.என்.எம்.ஐ.டி.12வது மெயின், 27வது கிராஸ்,பனசங்கரி இரண்டாவது ஸ்டேஜ்,பெங்களூர் -70

பொது டிக்கெட் - ரூ.500விஐபி டிக்கெட் - ரூ. 750

டிக்கெட்டுகளை பெற 8147529660/9482341141 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


Post Comment

Post Comment