ஆரம்பமே அதிரடி தான் - நயன்தாராவின் அடுத்த படத்தின் முக்கிய அப்டேட்


Posted by-Kalki Teamதெலுங்கில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் `சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பயங்கர சண்டைக் காட்சிகளுடன் உருவாகி இருப்பதாக படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் சயீரா நரசிம்மரெட்டி. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தெரிவித்துள்ளார்.

படம் குறித்து ரத்னவேலு பேசும் போது,

சுமார் 25 நாட்கள் நடந்த முதற்கட்ட படப்பிடிப்பில் அதிபயங்கர சண்டைக்காட்சிகளை படமாக்கினோம், அது சிறப்பாக வந்திருக்கிறது. தொடர்ந்து நயன்தரா சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவற்றை படமாக்கப்பட்டது. வருகிற நவம்பர் மாதம் வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். நவம்பரில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கும். படத்தின் திரைக்கதையில் ஹீரோயிசம் மட்டும் இல்லாமல் சுதந்திர உணர்வுகளுடன் நாட்டுப்பற்று மிக்க படமாக இந்த படம் இருக்கும் என்றார்.

இந்த படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரூ.150 கோடி செலவில் இந்த படம் தயாராகி வருகிறது. சிரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரிக்கிறார்.


Post Comment

Post Comment