மம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ் :


Posted by-Kalki Teamமலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மம்முட்டி அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு மருமகளாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. ‘யாத்ரா’ என்ற பெயரில் தெலுங்கில் தயாராகும் இந்த படத்தில் ராஜசேகர் ரெட்டி வேடத்தில் மம்முட்டி நடிக்கிறார். இவருடைய மனைவியாக நயன்தாரா நடிக்கிறார்.

இதன் மூலம் 20 ஆண்டுகளுக்குப்பிறகு தெலுங்கு படத்தில் மம்முட்டி நடிக்கிறார். மாகிராகவ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ராஜசேகர் ரெட்டி மகன் ஜெகனின் மனைவி பாரதியாக நடிக்க கீர்த்தி சுரேஷ்சிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் ஒரு சரித்திரப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்திருக்கிறது. ராஜசேகர் ரெட்டியாகவும், அவர் மனைவியாகவும் மம்முட்டி, நயன்தாரா நடிக்கும் இதில் இவர்களுடைய மருமகளாக வரும் கீர்த்தி சுரேசுக்கும் முக்கியமான வேடம் உள்ளது என்று கூறப்படுகிறது. எனவே, அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.


Post Comment

Post Comment