90s கிட்ஸுங்களுக்கு தெரிஞ்ச அப்போதைய பொழுதுபோக்கு இதுதானுங்க..


Posted by-Kalki Teamவளர்ந்துவிட்ட தொழில்நுட்பம், வீடியோகேமிலும், டிவியிலுமேயே பொழுதைக் கழித்து உடலை சீர்குலைக்கும் அவலம் நாம் அறிந்ததுதானே. இப்ப இருக்குற குழந்தைங்க ஓடிவிளையாட இடம் எங்க இருக்குதுன்னு கேக்குறீங்களா...!?

ஓடிப்புடிச்சு, ஒழிஞ்சுகிட்டு, தாவிக்குதிச்சி... இன்னும் எத்தனை எத்தனையோ... 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே தெரியும் அந்த அறுமையான விளையாட்டுக்கள். இன்னைக்கு இருக்குற குழந்தைங்க அப்படியா இருக்காங்க. வளர்ந்துவிட்ட தொழில்நுட்பம், வீடியோகேமிலும், டிவியிலுமேயே பொழுதைக் கழித்து உடலை சீர்குலைக்கும் அவலம் நாம் அறிந்ததுதானே. அடபோங்க பாஸ், இப்ப இருக்குற குழந்தைங்க ஓடிவிளையாட இடம் எங்க இருக்குதுன்னு கேக்குறீங்களா...!?

தமிழகத்தில் புறநகரங்களை விட மக்கள் தொகை நெருக்கடி, கட்டிடக் காடுகளும் அதிகமுள்ள இடம் சென்னை தான். வானுயர்ந்து நிற்கும் அப்பார்ட்மென்ட், எந்த நேரமும் புகையைக் கக்கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகள், இதையெல்லாம் தாண்டி நம்ம குழந்தைகள் சற்று ஆரோக்கியமாக வெளியில், வெயிலில் சுற்றித் திரிவதற்காகவே ஆங்காங்கே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளை மகிழ்விக்க...

ஆனாலும், இன்றைய நவீன உலகில் கைக்குள் உலகம் வந்து விட்ட பிறகு உலகத்தின் அகலமும், மனிதர்களின் ஆழமும் தெரியாமலேயே நம்முடைய குழந்தைகள் வளர்கின்றனர். நாமும் அவர்கள் அமைதியாய் இருந்தால் போதும் என விட்டு விடுகிறோம். ஆனால், குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க அனுமதிக்கும் சில இடங்களுக்கு கூடிப்போவதை விட சிறந்த அன்பளிப்பு இன்றைய நவீனயுகக் குழந்தைகளுக்கு நாம் தர முடியாது. வாருங்கள், சென்னை பெரு நகரத்தில் உங்கள் குழந்தைக்கு நிச்சயம் பிடிக்கும் சில இடங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

முட்டுக்காடு படகு சவாரி

கிழக்கு கடற்கரை சாலையில் அழகுநிறைந்து வியக்கும் வெகையில் அமைந்துள்ளது முட்டுக்காடு ஏரி. இங்கே உங்கள் குழந்தைகளை மாலை நேரத்தில் ஜாலியாக படகு சவாரிக்கு அழைத்து செல்லுங்கள். சூரிய ஒளியில் தங்க நிறத்தில் ஏரியில் இருக்கும் தண்ணீர் இருக்கும் போது அதன் நடுவே படகில் செல்லும் போது உங்கள் குழந்தையின் பரவசத்தை கண்டு மகிழ தவறாதீர்கள்.

எங்கே உள்ளது ?

சென்னையில் இருந்து பாலவாக்கம் வழியாக சுமார் 36 கிலோ மீட்டர் பயணித்தால் முட்டுக்காடு படகு சவாரி இல்லத்தை அடையலாம். தி நகரில் இருந்து 36.8 கிலோ மீட்டர் தொலைவிலும், வேளச்சேரி வழியாக 43 கிலோ மீட்டர் தொலைவிலும் கோவலம் கடற்கரைக்கு அருகே இந்த படகு சவாரி இல்லம் உள்ளது.

முதலை பூங்கா

டைனவுசர்களுடன் உலகத்தை பகிர்ந்துகொண்ட பங்காளிகள் தான் முதலைகள். பல லட்சம் ஆண்டுகளாக உலகத்தில் வாழ்ந்து வரும் சில உயிரினங்களில் முதலையும் ஒன்று. தடிமனான செதில் செதிலான தோல், நாக்கே இல்லாத அதிவலிமையான தாடை, அசரும் நேரத்தில் பதுங்கி இருந்து தாக்கும் தன்மை போன்றவை நமது குட்டி செல்லங்களிடையே ஆயிரம் கேள்விகளை எழுப்பும். இதில், இந்த பூங்காவிற்கே உரிய தனிச்சிறப்பு முதலை குட்டிகளை கைகளில் எடுக்கும் வாய்ப்பும் நமக்கு அளிக்கப்படுகிறது.

எங்கே உள்ளது ?

சென்னையில் இருந்து கடற்கரை சாலை வழியாக சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரம் அருகே உள்ளது முதலைப் பூங்கா. குறைந்த செலவில் அருமையான ஒரு நாளை உங்கள் குழந்தைகளுடன் இங்கே கொண்டாடுங்கள். மேலும், பூங்காவினைச் சுற்றிப்பார்த்துவிட்டு கால்நடையாக அருகில் உள்ள கடற்கரைக்கும் சென்று குழந்தைகளுடன் நேரத்தை செலவிடலாம்.

வி.ஜி.பி கேளிக்கை பூங்கா

தேர்வு, டியூஷன், முடிக்க வேண்டிய வீட்டுப்பாடங்கள், ரெக்கார்ட் வேலைகள் என நிற்க நேரமிலாமல் கொண்டாடி மகிழ வேண்டிய தங்கள் குழந்தை பருவத்தை புத்தக புழுவாகவே கழிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் தங்களை மறந்து கொண்டாடி மகிழ இம்மாதிரியான கேளிக்கை பூங்காக்களுக்கு அழைத்து வரலாம். பல்வேறு வகையான விளையாட்டுகள், சாகச சவாரிகள் இங்கே உள்ளன. போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு ஆசை தீர ஒரு நாளை இங்கே உங்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக அளியுங்கள். நம் குழந்தைகளின் மகிழ்ச்சியை விட அழகான விஷயம் வேறென்ன இந்த உலகத்தில் இருந்து விட போகிறது.

எப்படிச் செல்வது ?

சென்னையில் இருந்து மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், அடையாரைக் கடந்து பாலவாக்கம், நீலாங்கரை சாலையில் சென்றால் விஜிபி பூங்காவை அடையலாம். இதன் மொத்த பயண தூரம் சுமுர் 24 கிலோ மீட்டர் ஆகும்.Post Comment

Post Comment