உடன்பிறப்பே... பிறந்தநாளுக்கு மாறி மாறி வாழ்த்திய டிடி, சிவகார்த்திக்கேயன்


Posted by-Kalki Teamவிஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்சினி நேற்று தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடியிருக்கிறார். சிவகார்த்திக்கேயன் தனது 31வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் பிரபலமடைந்துள்ளார் சிவகார்த்திக்கேயன். அதேபோல விஜய்டிவியில் காபி வித் டிடி நிகழ்ச்சியினால் பிரபலமானவர் திவ்யதர்சினி. இருவரும் தங்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

திவ்யதர்சினியின் பிறந்தநாளுக்கு குஷ்பு, திரிஷா உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களும் வாழ்த்தியுள்ளனர்.

தொலைக்காட்சியில் இருந்த போதே இருவரும் உடன்பிறப்பே என்றுதான் அழைத்துக் கொள்வார்களாம்.

சிவகார்த்திக்கேயனும் இதேபோல டிடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காபி வித் டிடி மூலம் திரை நட்சத்திரங்களின் நட்பை சம்பாதித்தவர் டிடி. எனவே அவரது பிறந்தநாளுக்கு குஷ்புவின் வாழ்த்து கூறியுள்ளார்.

டிடி என்பதை கேடிக்கு வாழ்த்து என்று கூறியுள்ளார் கிருஷ்ணா.

நடிகை திரிஷாவின் வாழ்த்தில் இன்று போல் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் திரிஷா.

விசில், நளதமயந்தி படங்களில் நடித்த டிடி சினிமாவிற்கு பிரேக் விட்டிருந்தார். காபி வித் டிடி நிகழ்ச்சிக்கும் சற்று ஓய்வு கொடுத்திருக்கிறார். விளம்பரங்களில் அவ்வப்போது தலை காட்டினாலும் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

டிடியை சினிமாவில் நடிக்க மாதவன் அழைத்ததாகவும் அதற்கு டிடியும் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. டிடியை கூடிய விரைவில் பெரிய திரையில் பார்க்கலாம்.


Post Comment

Post Comment