கொட்டாரம் ராமர் கோவிலில் ராமநவமி விழா 23-ந்தேதி தொடங்குகிறது :


Posted by-Kalki Teamகொட்டாரம் நந்தவனத்தில் உள்ள ராமர்கோவிலில் ராமநவமி விழா வருகிற 23-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

கொட்டாரம் நந்தவனத்தில் உள்ள ராமர்கோவிலில் ராமநவமி விழா வருகிற 23-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 23-ந் தேதி காலை மகா கணபதி ஹோமமும், அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும், மாலை ராம நாம சங்கீர்த்தனமும், இரவு ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறுகிறது.

24-ந் தேதி காலை அபிஷேகமும் சிறப்பு தீபாராதனையும், அகண்ட ராம நாம ஜெபமும், இரவு பஜனையும் நடக்கிறது.

25-ந் தேதி காலை பஜனையும், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், மதியம் மகா அன்னதானமும், மாலை ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரவு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கொட்டாரம் ராமர் கோவில் பக்தர்கள் சங்கம் மற்றும் ஸ்ரீராமர்-ஸ்ரீஅனுமன் ஆன்மிக பண்பாட்டு கல்வி அறக்கட்டளை நிர்வாகக்குழுவினர் செய்து வருகிறார்கள்.


Post Comment

Post Comment