ராகுவை விரதமிருந்து வழிபடும் முறைகள் :


Posted by-Kalki Teamராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விரத முறைகளை பின்பற்றி வழிபாடு செய்தால் ராகுவில் இன்னல்களில் இருந்து விடுபடலாம்.

ராகு காலத்தில் விரதமிருந்து துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும்.

சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருப்பது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்யலாம்.

சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, அடுப்பில் உபயோகப்படுத்தும் கரி, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுக்கலாம்.

கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது ஆகியவை செய்யலாம்.

பாம்பு புற்றுக்கு பாலூற்றுவது, முட்டை வைப்பது நல்லது.

கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்தலாம்.

ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பிஜ மந்திரத்தை 40 நாட்களில் 18000 தடவை சொல்லலாம்.

எதிரிகளை வெல்லவும், நோய் தீரவும், அரசாங்க உதவிகள் பெறவும். ராகு பூஜை செய்வது நல்லது.

ராகுவின் நன்மையான காரகங்கள், அயல் மொழியில் புலமை, தைரியம், ஆராய்ச்சி, சமூக சேவை, புகைப்படக் கலை, மந்திர மாயங்களில் ஆர்வம் போன்றவை.

ராகுவின் துயகாரகங்கள், மனதில் இறுக்கம், மின்சார அதிர்ச்சி, எதிலும் ஆர்வம் இல்லாத நிலை, தீய எண்ணங்கள், கெட்ட கனவுகள், சமூகத்தில் தாழ்ந்து இருத்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், அயல் நாட்டில் இருக்கும் போது தொல்லை ஏற்படுதல், தீயவழிகளில் பணத்தை இழத்தல், உடல் நல பாதிப்பு வழக்குப் பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம்.


Post Comment

Post Comment