ஸ்ரீ சாய்நாதர் அருள் கிடைக்கும் ஸ்லோகங்கள்


Posted by-Kalki Teamசீரடி ஸ்ரீ சாய்நாதருக்கு உகந்த ஸ்லோகங்களை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

சச்சிதானந்தாய தீமஹி

தன்னோ சாய் ப்ரசோதயாத்.

ஸ்ரீ சாய்நாதர் திருவடி

சாய் நாதர் திருவடியே

சம்பத் தளிக்கும் திருவடியே

நேயம் மிகுந்த திருவடியே

நினைத்த தளிக்கும் திருவடியே

தெய்வ பாபா திருவடியே

தீரம் அளிக்கும் திருவடியே

உயர்வை அளிக்கும் திருவடியே

உந்தன் அற்புதத் திருவடியே!

ஸ்ரீ சீரடி சாய்பாபாவின் தியான ஸ்லோகம்

பத்ரி க்ராம ஸமத் புதம்

த்வாரகா மாயீ வாசினம்

பக்தா பீஷ்டம் இதம் தேவம்

சாய் நாமத் நமாமி.


Post Comment

Post Comment