தோஷங்கள், செய்வினைகள், போன்றவை நீங்க இந்த பொருளை வீட்டில் வைங்க!


Posted by-Kalki Teamஅனைவருக்குமே மகிழ்ச்சியான எந்த குறையும் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையிருக்கும். இந்த வகையில் அனைத்து செல்வங்களையும் அள்ளி தரும் மகாலட்சுமியின் பார்வையை வீட்டிற்குள் விழ வைக்க கூடிய ஒரு பொருள் தான் சங்கு...!

வலம்புரி சங்கினை வீட்டில் வைத்து வழிபட்டால் பல நன்மைகள் நம்மை தேடி வரும் என்பது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.. இந்த வலம்புரி சங்கினை வீட்டில் வைத்திருந்தால் இழந்த மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை திரும்ப பெற முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன..

அப்படி என்ன மகிமை இருக்கிறது இந்த சங்கில், இந்த சங்கினை வீட்டில் எப்படி வைக்க வேண்டும், இந்த சங்கினை வழிபடும் முறைகள் என்னென்ன? என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

சங்கின் வாய்ப்பகுதியில் ஆரம்பித்து சங்கின் சுருள் அமைப்பு, வலப்புறமாக சுற்றி, சங்கின் அடிப்பகுதியில் முடியும் வகையிலான சங்கே, வலம்புரி சங்கு எனப்படுகிறது. வலம்புரி சங்கை காதில் வைக்க, ஓம் என்ற பிரணவ சப்தம் வரும்.

வலம்புரி சங்கினை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வலம்புரி சங்கை சுத்தமாகவும், தினமும் பூஜை செய்தும் வழிபட வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகும்.

சித்ரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால், கணவன்- மனைவி நல்ல ஆயுளுடன் வாழ்வார்கள்..

வலம்புரி சங்கானது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுகிறது. தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதனை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.

பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாத கணவன்- மனைவிக்கு புத்திர பாக்கியம் கிட்டுமாம்..

உங்களது வீட்டில் வலம்புரி சங்கினை வைத்து பூஜை செய்து வந்தால், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் தாக்கம் அண்டாது..

சந்தான பாக்கியம் கிடைப்பது தாமதமாகும் காரணத்தால் மனம் கலங்கி நிற்கும் தம்பதிகளின் மனக்கவலை விலக அவர்கள், வலம்புரிச் சங்கின் வாயிலாகக் குரு பகவானைத் துதி செய்தால், சந்தான லட்சுமியின் அருளால், சந்தான பாக்கியத்தைப் பெற்று நிறை வாழ்வு எய்தலாம்.

அதாவது பஞ்சமி திதிகளில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் வலம்புரிச் சங்கில் சிறிது தேன் கலந்த பசும்பாலை வைத்து குருவின் ஸ்துதியை 48 முறை உச்சாடனம் செய்து, அந்தத் தேன் கலந்த பசும்பாலை கணவன், மனைவி இருவரும் பிரசாதமாக அருந்தி வந்தால் எண்ணிய எண்ணம் ஈடேறுவதோடு, மனக்குறைகள் யாவுமே மாயமாய் மறைந்து விடும்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அமையப் பெற்றவர்கள் அந்த தோஷத்தின் வலிமை நிலைகளுக்கேற்றவாறு வலம்புரிச் சங்கு பூஜையைக் குறிப்பிட்ட காலத்திற்குச் செய்து வந்தால் தோஷ நிவர்த்தி அடையப் பெறலாம்.

வாஸ்து குறைபாடுகள் உள்ள வீடுகளில் பாதிப்புகள் நீங்க, சங்கில் மஞ்சள், துளசி கலந்த நீரை, காலை வேளைகளில் வீடுகளில் தெளித்து வர, விரைவில் பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதீகம்.Post Comment

Post Comment