ரஜினிக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி :


Posted by-Kalki Teamகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ரஜினிக்கு தம்பியாக நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

ரஜினி நடிப்பில் காலா படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி திரைக்கு வருகிறது.

ரஜினி அடுத்ததாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் முதல் முறையாக இந்த படத்தின் மூலம் ரஜினியுடன் இணைகிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர்-நடிகைகள், தொழில் நுட்பகலைஞர்கள் யார் என்பது இன்னும் வெளியாகவில்லை.

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, இறைவி படங்களில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். எனவே, ரஜினி நடிக்கும் இந்த படத்திலும் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று செய்தி வெளியாகி உள்ளது. அவர் வில்லனாக நடிக்கப்போவதாக கூறப்பட்டது. சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியானது.

இப்போது, இந்த படத்தில் ரஜினியின் தம்பியாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக புதிய தகவல் பரவி வருகிறது. உண்மையாகவே, அவர் இந்த படத்தில் நடிக்கிறாரா? என்னவாக நடிக்கிறார்? என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.Post Comment

Post Comment