இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை இட்லி :


Posted by-Kalki Team



முருங்கைக் கீரையை வைத்து அடை, பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று முருங்கைக் கீரை வைத்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இட்லி மாவு - 1 கப்,

ஆய்ந்த முருங்கைக் கீரை - ஒரு கப்,

மிளகு தூள் - அரை டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,

உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை :

முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

இட்லி மாவுடன் கீரை, மிளகு தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான முருங்கை இலை இட்லி ரெடி.


Post Comment

Post Comment