முதல் ரவுடித்தனத்தை காலை 11 மணிக்கு காட்ட வரும் ரஜினி :


Posted by-Kalki Teamதனுஷ் தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் டீசர் வெளியாகும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் காலா. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

இப்படத்தை அடுத்த ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடும் என்று தனுஷ் அறிவித்திருந்தார்.

நள்ளிரவு 12 மணியளவில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், மார்ச் 1ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தனுஷ் தற்போது அறிவித்திருக்கிறார். இதனால், ரசிகர்கள் தற்போதே கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

ஏற்கனவே தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! “ என்று பதிவு செய்து இருந்தார். அதனால் நாளை வெளியாகும் காலா டீசரில் இந்த வசனம் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post Comment

Post Comment