தோசைக்கு அருமையான காளான் செட்டிநாடு மசாலா :


Posted by-Kalki Teamசாதம், சப்பாத்தி, இட்லி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் செட்டிநாடு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

காளான் - 200 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - 1

சின்ன வெங்காயம் - 50 கிராம்

தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்

பட்டை - 1

ஏலக்காய் - 1

லவங்கம் - 1

மிளகு - ஒன்றரை டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

வரமிளகாய் - 8

தனியா - 2 டீஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 6 பல்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய் மிளகு, மிளகாய், தனியா, சோம்பு, சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கி தேங்காய் சேர்த்து அனைத்தையும் விழுதாக அரைக்கவும்.

மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் நறுக்கிய காளான், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின் அரைத்து வைத்த விழுது உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வேக வைக்கவும்.

இறக்கும் முன்பு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சூப்பரான காளான் செட்டிநாடு மசாலா ரெடி.


Post Comment

Post Comment