தனது அடுத்த படத்திற்காக புதிய அவதாரம் எடுக்கும் திரிஷா :


Posted by-Kalki Teamநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் திரிஷா புதிதாக நடிக்க இருக்கும் படத்துக்காக குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் திரிஷா நடிக்கிறார். ஏற்கனவே கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம் உள்பட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

தற்போது தனது கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் படங்களை தேர்வு செய்கிறார். அவர் பேயாக நடித்துள்ள மோகினி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

அரவிந்தசாமியுடன் நடித்துள்ள சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் பட வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளன. 1818, கர்ஜனை, 96 ஆகிய மேலும் 3 படங்களும் கைவசம் உள்ளன. மலையாளத்தில் நிவின் பாலியுடன் நடித்து கடந்த மாதம் திரைக்கு வந்த ஹே ஜூட் படத்திலும் திரிஷா கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன.

இந்த நிலையில் திரிஷா குத்துச்சண்டை பயிற்சி பெறும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அவர் ஆவேசமாக சண்டையிடுவதை பார்த்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகிறார்கள். புதிதாக நடிக்கும் படத்துக்காக இந்த குத்துச்சண்டை பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.


Post Comment

Post Comment