மாதவன் - விஜய் சேதுபதி இனையும் விக்ரம் - வேதா!


Posted by-Kalki Teamஇறுதி சுற்று படத்தினை தொடர்ந்து ஓய் நாட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தினை புஷ்கர் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. புஷ்கர் இறுதிசுற்று படத்தின் போது இயக்குனர் சுதாவுக்கு உறுதுனையாக இருந்துள்ளார். இதன் மூலம் மாதவன் மூலம் நட்பு ஏற்பட அவருக்கு ஒரு வரியில் கதையொன்றை கூறியுள்ளார்.

மாதவனுக்கும் அது பிடித்து போக, தான் நடிப்பதாக உறுதியளித்துள்ளார். இதில் மாதவனுடன் இணைந்து இன்னொரு நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மாதவன் என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக விக்ரம் என்ற கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி வேதா என்ற கேங்க்ஸ்டர் வேடத்திலும் நடிக்கவுள்ளனர். இது குறித்து தயாரிப்பாளர் சசிகாந்த் "வொய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன்.

கடந்த ஒரு வருடமாக இந்தப் படம் பற்றிய விவாதங்கள் நடந்து தற்போதுதான் இறுதி வடிவத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே மாதவன் நடித்த இறுதி சுற்று மற்றும் புஷ்கரின் வ (குவாட்டர் கட்டிங்) படத்தினை தயாரித்த ஒய் நாட் நிறுவனம் இப்படத்தினை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.


Post Comment

Post Comment