இனி பிளே ஸ்டோர் வேண்டாம் : யாழ்ப் ஒன்றே போதும்.!


Posted by-Kalki Teamபொதுவாக நமது ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் ஆப்ஸ் தேவையென்றால் பிளே ஸ்டோரில் தேடி கண்டிப்பாக இன்ஸ்டால் செய்வோம்.

மேலும் அவற்றில் பதிவிறக்கம் செய்யும் வசதி இல்லை, வெறும் இன்ஸ்டால் செய்யும் வசதி மட்டுமே உள்ளது. இப்போது யாழ்ப் என்ற புதிய ஆப் வசதி வெளிவந்துள்ளது, இவற்றில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் விரும்பிய ஆப்ஸ் பேக்கேஜை பதிவிறக்கம் செய்ய இந்த யாழ்ப் ஸ்டோர் (Yalp Store) ஒன்றே போதும், மேலும் இணையத்தில் கிடைக்கும் அனைத்து ஆப்ஸ் வசதியும் இவற்றில் கிடைக்கும். அதன்பின்பு நீங்கள் விரும்பிய ஆப்ஸை தேர்வுசெய்து, மிக எளிமையான முறையில் பதிவிறகம் செய்து இன்ஸ்டால் செய்யமுடியும். மேலும் இந்த யாழ்ப்-ஐ பயன்படுத்தும் வழிமுறையை பார்ப்போம்.

வழிமுறை-1:

முதிலில் உங்கள் ஸ்மார்ட்போனில் யாழ்ப் ஸ்டோர் (Yalp Store) ஆப்ஸை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை-2:

இந்த யாழ்ப் ஸ்டோர் ஆப் வெறும் 1எம்பி-ஆக உள்ளது, எனவே இவற்றை விரைவில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

வழிமுறை-3:

அடுத்து யாழ்ப் ஸ்டோர் ஆப்ஸை திறந்தால் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து ஆப்ஸையும் காண்பிக்கும். அதன்பின்பு இவற்றின் மேலே search (தேடல்) இடம்பெற்றுள்ளது, இவற்றைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பிய ஆப்ஸை

பதிவிறக்கம் செய்ய முடியும்.

வழிமுறை-4:

மேலும் நீங்கள் விரும்பிய ஆப்ஸை தேர்வு செய்தபின்பு, அவற்றில் ஆப்-பற்றிய முழுத்தகவல்கள் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் போன்ற பல்வேறு விருப்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

வழிமுறை-5:

இவற்றில் வெறும் ஆப்ஸ் மட்டுமல்லாமல் எந்தவொறு கேம் வசதிகளையும் மிக எளிமையாக பதிவிறக்கம் செய்ய முடியும்.Post Comment

Post Comment