ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் வசூல்..!


Posted by-Kalki Teamஇயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு இருக்கும். காரணம் இவர் தேர்தெடுத்து இயக்கும் படங்கள் கண்டிப்பாக வித்தியாசமான கதை களத்தை கொண்டதாக இருக்கும். அந்த வகையில் இவர் எடுத்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றுள்ளது.

இதே போன்ற பல எதிர்பார்ப்புகளுக்கிடையேயும், சர்ச்சைகளுக்கு இடையேயும் நேற்று வெளியான திரைப்படம் நாச்சியார்.

படத்தின் டீசர் வெளியான போதே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஜோதிகா துணிச்சலான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்தில், ஜி.வி பிரகாஷ் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நேற்று பலரது எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான நாச்சியார் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தையும் அமோக வரவேற்பையும் பெற்று வருகிறது.

தற்போது இப்படம் முதல் நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 31 லட்சம் வசூலித்துள்ளது. படத்தின் வரவேற்பை பார்க்கும் போது ஜோதிகா நடித்துள்ள இந்தப்படம் அவர் நடித்த மற்ற படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.Post Comment

Post Comment