அசத்தல் அம்சங்களுடன் இணையத்தில் கசிந்த விவோ ஸ்மார்ட்போன் :


Posted by-Kalki Teamவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் கசிந்திருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் முழுமையான பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

விவோ நிறுவனம் X20 பிளஸ் UD

ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்தது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையுடன் விவோ X20 பிளஸ் UD அறிமுகம் செய்யப்பட்டது.

விவோ X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருந்த நிலையில், ஸ்கிரீனை சுற்றி பெசல்கள் இடம்பெற்றிருந்தது. இம்முறை வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் புதிய ஸ்மார்ட்போனில் முழுமையான பெசல்-லெஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

புதிய புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் பார்க்க சியோமி Mi மிக்ஸ் 2 போன்று காட்சியளிக்கிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் X30 மாடலாக இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஸ்மார்ட்போனில் இயர்பீஸ் மற்றும் முன்பக்க கேமரா இடம்பெறாத நிலையில், 95% ஸ்கிரீன்-டூ-பாடி ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

புதிய விவோ ஸ்மார்ட்போன் வழக்கமான இயர்பீஸ்-க்கு மாற்றாக கேன்டிலீவர் பெய்சோஎலெக்ட்ரிக் செராமிக் அகௌஸ்டிக் சிஸ்டம் மற்றும் Mi மிக்ஸ் போன்று பிராக்சிமிட்டி சென்சார் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி கேமரா இடம்பெறாத நிலையில் புகைப்படத்தின் உண்மை தன்மை கேள்வி குறியாகவே உள்ளது.

விவோ X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனில் சினாப்டிக்ஸ் நிறுவனத்தின் க்ளியர் ஐடி FS9500 ஆப்டிக்கல் கைரேகை சென்சார் பயன்படுத்துகிறது. தற்போதைய ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் மற்ற பாதுகாப்பு அம்சங்களை விட இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் பல்வேறு வகையில் சிறப்பாக செயல்படுவதாக விவோ தெரிவித்துள்ளது.


Post Comment

Post Comment