அருமையான ஜீரா ஆலு :


Posted by-Kalki Teamசாதம், சப்பாத்தி, சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஜீரா ஆலு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 3,

சீரகம் - 2 டீஸ்பூன்,

தனியா - 2 டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு,

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,

காய்ந்த மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்,

சாட் மசாலாப் பொடி - 1/2 டீஸ்பூன்,

கொத்தமல்லித்தழை - சிறிது.

செய்முறை :

வெறும் கடாயில் சீரகம், தனியாவை வறுத்து ஆறியதும் பொடித்துக் கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் நெய் ஊற்றி சூடானதும் சிறிது சீரகம் போட்டு தாளித்த பின் உருளைக்கிழங்கை போட்டு வறுக்கவும்.

உருளைக்கிழங்கு மொறு மொறு என்று வந்ததும் உப்பு, மிளகாய்த்தூள், மாங்காய் பொடி, சாட் மசாலாப் பொடி, வறுத்து பொடித்த சீரக தனியா பொடி சேர்த்து வறுக்கவும்.

அனைத்தும் சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையை கலந்து பரிமாறவும்.


Post Comment

Post Comment