சகல ஞானமும் தரும் ஸ்லோகம் :


Posted by-Kalki Teamபுத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர்களாகத் திகழ இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள்.

கல்வியைக் கண்ணுக்கு நிகராகச் சொல்கிறோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார்கள், முன்னோர்கள். கல்வி என்பது தெய்வத்துக்குச் சமமானது.

ஒருவீட்டில் கல்விச் செல்வம் இருந்து விட்டால், அங்கே சகல செல்வங்களும் குடியேறிவிடும் என்கின்றன ஞானநூல்கள்.

எனவே, கல்வி ஞானம் கிடைக்கக்கூடிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். புத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர்"களாகத் திகழ்வீர்கள் என்பது உறுதி!

ஸ்ரீஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபினி

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா

ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம்

ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!

இந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள். சகல ஞானமும் பெற்று, புத்திமானாக வாழ்வில் உயர்வீர்கள்.


Post Comment

Post Comment