வருடந்தோறும் கணபதி ஹோமம் செய்ய வேண்டுமா?


Posted by-Kalki Teamநாம் வாழும் வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்வது பல நன்மைகளைப் பயக்கும். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

சொந்த வீடு குடிபோகும் போது என்றில்லாமல், நாம் வாழும் வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்வது பல நன்மைகளைப் பயக்கும்.

ஒரு வீட்டில் ஹோமம் செய்வதால் அது அந்த வீட்டில் உள்ளவர்களை காப்பதோடு மட்டும் அல்லாமல், சுற்றுச் சூழலுக்கும் கூட பேருதவி செய்கிறது.

ஹோமப் புகையும் ஹோமத்தின் போது கூறப்படும் மந்திரங்களும் ஒரு வீட்டை மட்டுமல்ல ஊரையே காப்பாற்றும். இதுபோல எல்லோரும் செய்து வந்தால் காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படும். நன்கு மழை பெய்யும். இயற்கை சீற்றம் ஏற்படாது. ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்வதோடு, பிறரையும் செய்யச் சொல்லலாம்


Post Comment

Post Comment