7 ஆண்டுகளுக்கு பின், சமந்தா ஸ்வீட் சர்ப்ரைஸ் :


Posted by-Kalki Teamகன்னடத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற `யு-டர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கின் மூலம் 7 வருடங்களுக்குப் பிறகு நடிகை சமந்தாவும் - ராகுல் ரவீந்திரனும் இணைந்து நடிக்கின்றனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `யு-டர்ன்.

பவன் குமார் இயக்கிய இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ராதிகா சேத்தன், திலீப் ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்படுகிறது.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தில், ஷ்ரத்தா நடித்த கதாபாத்திரத்தில் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடிக்க இருக்கிறார். குற்றப் பின்னணியை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் துவங்க இருப்பதாக சமந்தா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் ஆதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். `மாஸ்கோவின் காவேரி படத்திற்கு பிறகு ராகுல் ரவீந்திரன் - சமந்தா இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கின்றனர். 7 வருடங்களுக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து நடிப்பது இருவருக்குமே சர்ப்ரைஸாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு ரீமேக்கில் சில மாற்றங்களை கொண்டுவர இயக்குநர் பவன்குமார் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


Post Comment

Post Comment