விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் முக்கிய பிரபலம் :


Posted by-Kalki Teamஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 62 படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் முக்கிய பங்காற்றுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தளபதி 62 படத்தின் பூஜையை தொடர்ந்து, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் உடன் பிரபல எழுத்தாளர் ஜெய மோகனும் இந்த படத்தின் கதை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, காவியத் தலைவன், 2.0 உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயரிடப்படாத இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். தேசிய விருது எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை பணிகளை சந்தானம் மேற்கொள்கிறார்.

படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைவது ரசிகர்ளிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Post Comment

Post Comment