விஜய் டிவி தீனாவுக்கு அடித்த ஜாக்பாட்... தனுஷ் தயாரிப்பில் ஹீரோவாகும் தீனா!

Posted by-Kalki Teamவிஜய் டி.வி-யின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமானவர் தீனா.

இப்போதும் தொலைபேசியின் வழியாக விஜய் டி.வி-யின் முக்கிய விருந்தினர்கள் உள்பட அனைவரையும் கலாய்த்து வருகிறார் தீனா.

இந்த நிலையில் ஏற்கெனவே சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ள தீனா தற்போது ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் விஜய் டிவி-யின் தீனா ஹீரோவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும், இந்த படத்தை அடுத்து தனுஷ் தயாரிக்கும் இன்னொரு படத்திலும் தீனா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு மலையாளத்தில் புதுமுகங்கள் நடித்து வெளியான படம் கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன். நூறு நாட்கள் ஓடிய இந்தப்படத்தை மலையாள நடிகர் திலீப்பின் நண்பரான நாதிர்ஷா என்பவர் தான் இயக்கியிருந்தார்.

விஜய் டி.வி-யின் தொகுப்பாளர்களையும், போட்டியாளர்களையும் கலாய்த்து கதறவிடும் தீனாவுக்கு தனுஷின் மூலமாக பெரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டைமிங் காமெடி சென்சில் பட்டையைக் கிளப்பும் தீனா நடிப்பிலும் தூள் கிளப்பினால் ரசிகர்களை வெகுவாகக் கவரலாம்.Post Comment

Post Comment