ஒரே நிறுவனத்துக்கு மூன்று படங்கள் இயக்கும் இயக்குநர்


Posted by-Kalki Teamஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் சண்டை வராமல் இருக்காது. படத்துக்கு பூஜை போட்டது முதல் ரிலீஸ் ஆகும் வரை தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒற்றுமையாக இருந்தால் ஆச்சர்யம். அப்படி ஒரு ஆச்சர்யம் தான் இந்த செய்தி. மைனா, சாட்டை, மொசக்குட்டி போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் சவுகார்பேட்டை. ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், கதாநாயகியாக ராய் லட்சுமி நடித்துள்ள இப்படத்தை வடிவுடையான் இயக்கியுள்ளார். இப்படத்தை வருகிற 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

சவுகார்பேட்டை படத்தை தொடர்ந்து இதே நிறுனத்திற்காக பொட்டு என்ற படத்தை இயக்குகிறார் வடிவுடையான். பரத், நமீதா, இனியா முதலானோர் நடிக்கும் பொட்டு படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. பொட்டு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் இதே நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் வடிவுடையான். சவுகார்பேட்டை படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஸ்ரீகாந்தே இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஒரு படம் வெளியாவதற்கு முன்னாடியே அதே நிறுவனத்திற்கு ஒரு படத்தை அடுத்தடுத்து படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைப்பது அரிதான விஷயம். அந்த வாய்ப்பு வடிவுடையானுக்கு கிடைத்திருக்கிறது. வெரிகுட்.


Post Comment

Post Comment