புதினா - பன்னீர் கிரேவி :


Posted by-Kalki Teamசப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த புதினா - பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பன்னீர் - அரை கப்,

புதினா இலை - ஒரு கைப்பிடியளவு,

கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - சிறிதளவு,

வெங்காயம் - ஒன்று,

தக்காளி - ஒன்று,

பச்சை மிளகாய் - ஒன்று,

சர்க்கரை - அரை டீஸ்பூன்,

எண்ணெய் - தேவையான அளவு,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

பன்னீரை துண்டுகளாக நறுக்கி சிறிதளவு எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை வதக்கி தனியாக வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளியுடன் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த மசாலா மற்றும் உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

பச்சை வாசனை போனவுடன் வறுத்த வைத்த பன்னீர் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

சூப்பரான புதினா - பன்னீர் கிரேவி ரெடி.

சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த புதினா - பன்னீர் கிரேவி.


Post Comment

Post Comment