பாடகி சித்ராவுக்கு அரிவராசனம் விருது :


Posted by-Kalki Teamகேரள அரசின் 2018-ம் ஆண்டிற்கான அரிவராசனம் விருது பாடகி சித்ராவுக்கு வழங்கப்பட்டது.

பாடகி சித்ராவுக்கு அரிவராசனம் விருதை கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் வழங்கியபோது எடுத்த படம்.

கேரள அரசின் சார்பில் சிறந்த பாடல் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் அரிவராசனம் என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது.

2018-ம் ஆண்டுக்கான விருது பாடகி சித்ராவுக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழா மகர விளக்கு ஜோதி நாளில் சன்னிதானத்தில் உள்ள ஸ்ரீதர்மசாஸ்தா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ராஜூ ஆபிரகாம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்க தொகையினை வழங்கினார். இந்த விழாவில் சபரிமலை உயர் அதிகார குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். சிரிஜகன், தேவஸ்தான தலைவர் பத்மகுமார், உறுப்பினர் சங்கரதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விருதை பெற்றுக்கொண்ட பாடகி சித்ரா பேசும்போது, ‘எனக்கு கிடைத்த அரிவராசனம் விருது எனது வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த விருதாக கருதுகிறேன்‘ என்றார்.

முன்னதாக இருமுடி கட்டி வந்த பாடகி சித்ரா பதினெட்டாம் படி வழியாக சன்னிதானத்திற்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்தார்.


Post Comment

Post Comment