புவியீர்ப்பு விசையை கணித்து கட்டப்பட்ட பெரிய கோயில்!


Posted by-Kalki Teamதஞ்சைப் பெரிய கோயில், பெருவுடையார் கோயில் என்று தமிழிலும், பிரகதீஸ்வரர் கோயில் என்று சமஸ்கிருதம் கலந்தும் அழைக்கப்படுகிறது.

தமிழன் கட்டிய உலகின் தலைச்சிறந்த கோயில் இருக்கும் தஞ்சை நகரம், மாறி மாறி பல்வேறு மன்னர்கள் ஆண்ட காலத்தில் பிரகதீஸ்வரராக மாற்றப்பட்டது. அதனால்தான் பிரகதீஸ்வரர் எனும் பெயர் வந்தது. இது மும்பையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த முகலாய மன்னர்களின் ஆளுமைக்கு கீழும் இருந்தது. பொதுவாகவே முகலாய மன்னர்கள் மற்ற கலாச்சாரங்களை அழித்துவிட்டு தங்கள் கலைகளை புகுத்துவார்கள் என்று பேச்சு உள்ளது. அப்படியானால் இந்த கோயிலை ஏன் நுனி அளவும் அசைக்கமுடியவில்லை..

வரலாற்றைத் திருப்பிப்போடும் ரகசியங்களைத் தெரிந்து கொள்ள தஞ்சைக்கு பயணிக்கலாம் வாருங்கள். தஞ்சைக்கு எப்படி செல்வது என்று தெரிந்துகொண்டு, பின் அதன் சிறப்புகளையும், மறைக்கப்பட்டுள்ள ரகசியங்களையும் காண்போம்

சென்னையிலிருந்து தஞ்சாவூர் 346கிமீ தொலைவில் அமைந்துள்ளது. வழியில் எண்ணற்ற சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ள இந்த ஊருக்கு ரயில், விமானம், பேருந்து வசதிகள் சிறப்பாக உள்ளன.

விமானத்தில் பயணிப்பவர்கள் திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூரை வந்தடைய வேண்டும்.

பேருந்தில் பயணிப்பவர்களுக்கு சென்னை, கோவை, பெங்களூரு, திருநெல்வேலி, மதுரை ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன,

சென்னையிலிருந்து தஞ்சாவூர் செல்வதற்கு, காலை 8.15 மணிக்கு திருச்சி விரைவு வண்டி, 10.50 மணிக்கு நாகர்கோயில் விரைவு வண்டி, மாலை நான்கு மணிக்கு திருச்செந்தூர், இரவுகளில் ராமேஸ்வரம் விரைவு, தூத்துக்குடி விரைவு,மதுரை, மன்னை விரைவு, உழவன் விரைவு வண்டி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் வாரணாசி விரைவு, புவனேஸ்வர் விரைவு வண்டியும் உள்ளன.

சென்னை - தஞ்சாவூர் மொத்தம் இரண்டு வழித்தடங்களில் எளிதாக பயணிக்கலாம். ஒன்று கிழக்கு கடற்கரைச் சாலை. மற்றொன்று திருச்சி தேசிய நெடுஞ்சாலை. இதில் திருச்சி வந்து வரும் சாலையில் பயணிக்கவே பலர் விரும்புவர். சரி தஞ்சாவூரில் உள்ள பிரகதீசுவரர் கோயிலின் பெயர் ஏன் சமக்கிருதத்தில் உள்ளது என்று தெரியுமா?

பிரகதீஸ்வர் கோயில் என்பது தஞ்சையில் அமைந்துள்ள கோயிலின் பெயராகும். பெரிய கோயில் என்று நம் வாய்வழியாக கூறினாலும், அது பிரகதீஸ்வர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. உண்மையில் பிரகதீஸ்வர் என்பது தமிழ்ப்பெயரே அல்ல. முற்றிலும் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலுக்கு ஏன் சமக்கிருதத்தில் பெயர் வைக்கவேண்டும். அல்லது இந்த கோயிலை கட்டியது தமிழர்களே இல்லையோ என்ற சந்தேகம் நம் கண்முன் வந்துசெல்கிறது. அப்படியானால் உண்மை என்ன?

ரோம் நகரம் ஒரு இரவில் கட்டப்படவில்லை என்று முயற்சி செய்வதற்கு ஊக்கப்படுத்துவதற்கான பழமொழியாக கூறுவார்கள். ஆனால் பிரகதீசுவரர்கோயிலைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அதன் முயற்சிகளையும், சாதனைகளையும் விளக்கவேண்டிய அவசியமில்லை. சும்மாவா தமிழனின் பெருமை.

இந்த கோயிலின் கருவறையில் அமைந்துள்ள லிங்கத்தின் உயரம் பன்னிரண்டு அடிகள். தமிழின் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு. ஒரு உயிர் எப்படி மனிதர்களுக்கு முக்கியமோ அதைப் போலத்தான் அந்த கோயிலில் லிங்கம் என்பதாக பொருள் தருகிறது. பன்னிரண்டு அடிகள் என்பது அது மட்டுமில்லாது, கடிகாரத்தையும் குறிக்கிறது. இருபத்தி நான்கு மணி நேரங்கள் இருந்தாலும், ஏன் கடிகாரத்தில் பன்னிரெண்டு நேரங்கள் மட்டுமே இருக்கிறது என்பதை என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

இந்த கோயிலில் லிங்கம் அமைந்துள்ள பீடத்தின் உயரம் பதினெட்டு அடி ஆகும். இது தமிழ் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை. உயிரொடுமெய் கலந்து மொழியாகிறது. அதுமாதிரி மனித உயிர்கள் மெய்யுடன் கலந்ததால் ஒரு மொழி உருவாகிறது. காற்றில் குறிப்பிட்ட அளவு உள்ளிளித்து வெளியிடுவதால் புல்லாங்குழல் கூட ஓசையை இனிமையாக்கி தருகிறது.அதுபோல்தான் உடலும் உயிரும் அர்த்தமாகிறது. வாழ்க்கையின் தத்துவங்கள் பலவற்றை இந்த கோயிலில் குறியீடாக வைத்துள்ளான் தமிழன்.

கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி ஆகும். இது தமிழ் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை. உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகள் பிறக்கின்றன. அதுமாதிரிதான் லிங்கமும், லிங்கபீடத்தையும் காக்க கோபுரம் எனும் மிகப்பிரம்மாண்டமான அமைப்பு உள்ளது.

கருவறையின் லிங்கத்திற்கும் வெளியில் அமைந்துள்ள நந்திக்கும் இடையே உள்ள தூரம் 247அடி ஆகும். இது தமிழ் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை. லிங்கமும் நந்தியும் எப்படி இருக்கிறதோ அதுமாதிரி நம் உயிரும் நம் மொழியும் இருக்கவேண்டும் என்பதற்காகவே இது. உண்மையில் தமிழ் நம் உயிருக்கு மேல் அல்லவா.Post Comment

Post Comment