#அஜித்துடன் #நடிக்க #ஆசைப்படும் #ஹன்சிகா!


Posted by-Kalki Teamதமிழ் சினிமாவில் வந்த வேகத்திலேயே விஜய், தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, ஆர்யா என பல முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி நடித்தவர் ஹன்சிகா. அதனால் குறுகிய காலத்தில் பேசப்படும் நடிகையாகி விட்டார். அந்த வகையில், ரோமியோ ஜூலியட், வாலு படங்களைத் தொடர்ந்து ஜீவாவுடன் அவர் நடித்துள்ள போக்கிரிராஜா படம் வருகிற 26-ந்தேதி திரைக்கு வருகிறது.இதையடுத்து மனிதன் உள்பட சில படங்களில்

நடித்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. அதோடு சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி போன்ற நடிகர்களுடன் நடிப்பதற்காகவும் முயற்சித்து வரும் ஹன்சிகாவுக்கு, அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் தற்போது ஏற்பட்டுள்ளதாம்.

மார்க்கெட் ஓரளவு இருக்கும்போதே அவருடனும் நடித்து விட வேண்டும் என்று ஆசைப்படும் ஹன்சிகா, அடுத்தபடியாக அஜித்தை வைத்து படம் இயக்கும் டைரக்டர்களை தொடர்பு கொண்டு சான்சும் கேட்டு வருகிறாராம்.அவரது முயற்சிக்கு இதுவரை கிரீன் சிக்னல் விழவில்லை என்றாலும், அஜித் படவாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் தனது நட்பு வட்டாரங்களில் கூறி வருகிறார் ஹன்சிகா.Post Comment

Post Comment