துப்பாக்கி முனையில் ஹன்சிகா :


Posted by-Kalki Teamதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா தற்போது ஒரு சில படங்களையே கைவசம் வைத்திருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பிரபுதேவா ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கும் `குலேபகாவலி படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

ஹன்சிகா தற்போது சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி ஹன்சிகா அடுத்ததாக விக்ரம் பிரபு ஜோடியாக `துப்பாக்கி முனை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ராஸ்மதி ஒளிப்பதிவு செய்ய, நடிகர் சிம்புவின் உறவினர் எல்.வி.முத்து கணேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.Post Comment

Post Comment