சப்பாத்திக்கு அருமையான மிக்ஸ்டு வெஜிடபிள் ஸ்டூ :


Posted by-Kalki Teamவெஜிடபிள் ஸ்டூ ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். இன்று இந்த வெஜிடபிள் ஸ்டூ செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நூல்கோல் - 1,

கேரட் - 1,

குடைமிளகாய் - 1,

உருளைக்கிழங்கு - 1,

நறுக்கிய பீன்ஸ் - 1/4 கப்,

வெங்காயம் - 2,

தக்காளி - 3,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,

திக்கான தேங்காய்ப்பால் - 1/2 கப்.

அரைக்க...

தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,

பூண்டு - 6 பல்,

இஞ்சி - சிறு துண்டு,

காய்ந்தமிளகாய் - 6,

தனியா - 1 டேபிள்ஸ்பூன்,

சீரகம் - 1 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,

கசகசா - 1 டீஸ்பூன்.

செய்முறை :

அரைக்க கொடுத்த பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

தக்காளியை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து தோலுரித்து அரைத்து கொள்ளவும்.

கேரட், நூல்கோல், குடைமிளகாய், உருளைக்கிழங்கு, பீன்ஸ், வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், நூல்கோல், கேரட், குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

காய்கள் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி நுரை தட்டியதும் இறக்கவும்.

அருமையான மிக்ஸ்டு வெஜிடபிள் ஸ்டூ ரெடி.

சப்பாத்தி, நாண், தோசையுடன் சூடாக பரிமாறவும்.


Post Comment

Post Comment