பூரிக்கு அருமையான உருளைக்கிழங்கு மசாலா :


Posted by-Kalki Teamநாண், சப்பாத்தி, புல்கா, பூரிக்கு தொட்டுக்கொள்ள இந்த உருளைக்கிழங்கு மசாலா அருமையாக இருக்கும். இன்று இந்த மசாலா செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 4

பெரிய வெங்காயம் - 2

சின்ன தக்காளி - 1

பச்சை மிளகாய் - 4

மஞ்சள் தூள் - சிறிது

பெருங்காயத்தூள் - சிறிது.

எண்ணெய் - 1 -2 டேபிள்ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்

கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் (சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்)

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது.

செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு வெடிக்கவும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையாக இலகுவாகச் செய்யக்கூடிய பூரி உருளைக்கிழங்கு மசாலா ரெடி.


Post Comment

Post Comment