கபாலி டீசர் பிப்ரவரி 25ல் வெளியாகிறதா?

Posted by-Kalki Teamசென்னை: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கபாலி படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 25 ல் வெளியாகும் என்று நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி.

பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி தாதா வேடத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் வேகமாக நடைபெற்று வருகிறது.

அட்டக்கத்தி, மெட்ராஸ் என்று எதார்த்தம் கலந்த வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுத்திருப்பதால் கபாலி மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறிக் கிடக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை விரைவில் படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

படத்தின் தயாரிப்பாளர் தாணு இதுகுறித்து கபாலி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 20 அல்லது 25-ந் தேதிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். படக்குழு சென்னை வந்ததும் பிப்ரவரி 25-ந் தேதிக்கு மேல் டீசரை வெளியிடுவோம்".என்று கூறியிருக்கிறார்.

தாணுவின் இந்த பதில் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் நீண்ட வருடம் கழித்து ரஜினியை கபாலியில் காண்பதால் டீசர் பல்வேறு சாதனைகளை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை வருகின்ற மே மாதத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

சென்னை: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கபாலி படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 25 ல் வெளியாகும் என்று நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி.

பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி தாதா வேடத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் வேகமாக நடைபெற்று வருகிறது.

அட்டக்கத்தி, மெட்ராஸ் என்று எதார்த்தம் கலந்த வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுத்திருப்பதால் கபாலி மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறிக் கிடக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை விரைவில் படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

படத்தின் தயாரிப்பாளர் தாணு இதுகுறித்து கபாலி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 20 அல்லது 25-ந் தேதிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். படக்குழு சென்னை வந்ததும் பிப்ரவரி 25-ந் தேதிக்கு மேல் டீசரை வெளியிடுவோம்".என்று கூறியிருக்கிறார்.

தாணுவின் இந்த பதில் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் நீண்ட வருடம் கழித்து ரஜினியை கபாலியில் காண்பதால் டீசர் பல்வேறு சாதனைகளை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை வருகின்ற மே மாதத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.Post Comment

Post Comment