இடுப்பு சதையை குறைக்கும் ஸ்டிக் உடற்பயிற்சிகள் :


Posted by-Kalki Teamஇடுப்பு சதையை குறைக்க வீட்டிலேயே செய்துகொள்ளும் வகையில் ஸ்டிக் எக்ஸர்சைஸின் சில எளிய உடற்பயிற்சி முறைகளை இங்கே பார்க்கலாம்.

வீட்டிலேயே செய்துகொள்ளும் வகையில் ஸ்டிக் எக்ஸர்சைஸின் சில எளிய உடற்பயிற்சி முறைகளை இங்கே பார்க்கலாம்.

நேராக நின்று குச்சியை தோள்களில் வைத்து இரண்டு கைகளாலும் அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும். வலதுகாலை முன்புறமாக எடுத்து வைக்கவும். இப்படி குச்சியை வைத்து அழுத்தும்போது, நல்ல பிடிமானம் கிடைப்பதால் தோள்பட்டை மேடைகளில் அதிக எடையைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் கழுத்து, தோள் நரம்பு, தசைகளுக்கு வலு சேர்க்கும். கூன் இல்லாத நிமிர்ந்த தோற்றத்தையும் கொடுக்கும்.

அப்படியே மெதுவாக இடதுகாலை பின்புறமும், வலது காலை முன்புறமும் கொண்டுவந்து உடலை மட்டும் வலப்பக்கமாக திருப்ப வேண்டும். பக்கவாட்டில் நன்றாக வளைந்து பயிற்சியைச் செய்வதால் வயிற்றுப்பகுதியின் வெளிப்புற பக்கவாட்டு தசைகள், அடிவயிற்றுத் தசைகள், நரம்பு மண்டலங்களின் வேலை தூண்டப்படுகிறது. அப்பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து நல்ல தோற்றத்தை கொடுப்பதோடு, தசைகளின் இயக்கம் அதிகரிக்கிறது. வயிறு அழகான ‘V’ வடிவத்தைப் பெறும்.

இப்போது இடதுகாலை முன்புறமாகவும், வலது காலை பின்பக்கமாகவும் வைத்துக் கொண்டு உடலை மட்டும் இடப்பக்கமாக திருப்ப வேண்டும். மேலே குறிப்பிட்டதைப்போலவே வயிறின் பக்கவாட்டு தசைகள் நல்ல இறுக்கமடைகிறது. அதுமட்டு மல்லாமல் இடுப்புக்கு மேல் டயர் போல இருக்கும் அதிகப்படியான தசைப்பகுதியை குறைக்க முடியும்.

கால்கள் இரண்டையும் அகலமாக வைத்துக் கொண்டு, குச்சியை பிடித்தவாறே வலதுபுறமாக பக்கவாட்டில் நன்றாக சாய்ந்து நிற்க வேண்டும். இதனால் அடிவயிறு மற்றும் இடுப்பு தசைகள் வலுவடைகின்றன. இடுப்பில் உள்ள அதிகப்படியான தசைகள் குறைகிறது. அடிவயிற்று உறுப்புகள் தூண்டப்படுகின்றன. அடிவயிறு மற்றும் பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுக்கமடைகின்றன. பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

மேலே சொன்ன பயிற்சியையே இடது புறமாகவும் சாய்ந்து செய்ய வேண்டும். இதிலும் இடுப்பு தசை இறுக்கமடைந்து அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.


Post Comment

Post Comment