இந்த வார விசேஷங்கள் (2.1.2018 முதல் 8.1.2018 வரை)


Posted by-Kalki Team2.1.2018 முதல் 8.1.2018 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

2-ந்தேதி (செவ்வாய்) :

* ஆருத்ரா தரிசனம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தாமிர சபா நடனம்.

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பார்வதி அம்மன் ஊஞ்சல் சேவை.

* சகல சிவன் ஆலயங்களிலும் ஆரத்ரா தரிசனம்.

* ஆவுடையார் கோவிலில் ஈசன், மாணிக்கவாச கருக்கு உபதேசம் அருளிய லீலை.

* சிதம்பரம் ஆடவல்ல பிரானின் சித்தர் சபையில் சிதம்பர ரகசிய பூஜை.

* உத்திரகோசமங்கை கூத்தபிரான் ஆருத்ரா தரிசன காட்சி.

* மேல்நோக்கு நாள்.

3-ந்தேதி (புதன்) :

* சிதம்பரம் சிவபெருமான் முத்துப் பல்லக்கில் பவனி வரும் காட்சி.

* திருவல்லிக்கேணி பார்த் தசாரதி பெருமாள் கோவி லில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.

* திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் சகசர கலசாபிஷேகம்.

* சமநோக்கு நாள்.

4-ந்தேதி (வியாழன்) :

* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருப்பதி வேங்கிடமுடையான் புஷ்பாங்கி சேவை.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.

* மேல்நோக்கு நாள்.

5-ந்தேதி (வெள்ளி) :

* சங்கடஹர சதுர்த்தி.

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.

* இன்று விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும்.

* திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் சிவபெருமானுக்கு அயன உற்சவம் ஆரம்பம்.

* கீழ்நோக்கு நாள்.

6-ந்தேதி (சனி) :

* திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* திருவண்ணாமலை சிவபெருமான் பவனி வருதல்.

* குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பிரியாவிடை காட்சி.

* கீழ்நோக்கு நாள்.

7-ந்தேதி (ஞாயிறு) :

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் எண்ணெய்க் காப்பு உற்சவம் ஆரம்பம், 16 வண்டி சப்பரத்தில் பவனி.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வேத தாயார் சன்னிதிக்குள் புறப்பாடு.

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் ராபத்து உற்சவ சேவை.

* மேல்நோக்கு நாள்.

8-ந்தேதி (திங்கள்) :

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், கள்ளர் திருக்கோலமாய் இரவு சந்திர பிரபையில் பவனி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* திருவையாறு ஐயாறப்பர் பவனி வரும் காட்சி.

* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

* சமநோக்கு நாள்.


Post Comment

Post Comment