மீண்டும் காக்கி சட்டை போடும் ஜெயம் ரவி :


Posted by-Kalki Teamதனி ஒருவன், மிருதன், போகன் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் காக்கி சட்டை போடுகிறார் நடிகர் ஜெயம் ரவி.

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டிக் டிக் டிக். சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவியுடன் நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அடங்க மறு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்தில் ஜெயம் ரவி போலீசாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, தனி ஒருவன், மிருதன், போகன் ஆகிய படங்களில் ஜெயம் ரவி காக்கி சட்டை அணிந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post Comment

Post Comment