பட்ஜெட் விலையில் லெவல் ANC இயர்போன்கள்: சாம்சங் அறிமுகம்


Posted by-Kalki Teamசாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது அதிநவீன இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்த புதிய இயர்போன் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் ANC தொழில்நுட்பம் கொண்ட புதிய லெவல் இன்-இயர் (EO-IG930) இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஆக்டிவ் நாய்ஸ் கான்செலேஷன் (ANC) தொழில்நுட்பம் கொண்ட புதிய இயர்போன்கள் அனைத்து விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் புதிய இயர்போனில் டாக் இன் மோட் வசதியும் வழங்கப்படுகிறது.

டாக் இன் மோட் அம்சம் வாடிக்கையாளர்களை சுற்றியிருக்கும் சத்தத்தை கேட்க வழி செய்யும். மேலும் இயர்போன்களின் தரத்தை குறைக்காமல் வெளிப்புற சத்தத்தை கேட்க முடியும். மெட்டல் மற்றும் பாலிகார்போனேட் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள புதிய இயர்போன் பட்டன் கொண்ட இன்-லைன் ரிமோட் வழங்கப்பட்டிருப்பதால் அழைப்புகளை ஏற்கவும், ஒலியை கட்டுப்படுத்துவது, பாடல்களை தேர்வு செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.

புதிய இயர்போனில் உள்ள ANC அளவு குறைந்தபட்சம் 10 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. இதில் உள்ள ANC அளவு 90%x அளவு துல்லியமாக இருப்பதோடு வெளிப்புற சத்தத்தை 20 dB அளவு குறைக்கும் திறன் கொண்டுள்ளது.

புதிய இயர்போனில் வழங்கப்பட்டுள்ள ஹைப்ரிட் கேனால் இயர்டிப்ஸ் வடிவமைப்பு பயன்படுத்தும் போது சவுகரியமான அனுபவத்தை வழங்குவதோடு, வெளிப்புற ஒலியை கட்டுப்படுத்தி இசையை எவ்வித இடர்பாடும் இன்றி கேட்க செய்கிறது. இந்தியாவில் சாம்சங் இயர்போனின் விலை ரூ.3,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் சோனி நிறுவனமும் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்ட ஹெட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. சோனி WI-1000X, WH-1000XM2, WF-1000X மற்றும் WH-H900N என நான்கு மாடல்களில் WH-1000XM2 மற்றும் WH-H900N மாடல்கள் ஹெட்பேன்ட் ஸ்டைல் கொண்டிருக்கிறது. இவை முறையே ரூ.18,990 மற்றும் ரூ.29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முழுமையான வயர்லெஸ் ஹெட்போன்களான WI-1000X மற்றும் WF-1000X முறையே 14,990 மற்றும் ரூ.21,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நான்கு புதிய சோனி இயர்போன்களும் நாட்டின் அனைத்து சோனி விற்பனை மையங்கள் மற்றும் மின்சாதன விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. சோனி WH-1000XM2, WF-1000X மற்றும் WH-H900N இயர்போன்களில் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் அசம் மற்றும் சென்ஸ் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் சுற்றுப்புறத்திற்கு ஏற்ப ஒலியை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Comment

Post Comment