சாதத்திற்கு அருமையான பேபி உருளை மோர்க்குழம்பு :


Posted by-Kalki Teamமோர்க்குழம்பில் உருளைக்கிழங்கு சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த மோர் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பேபி உருளைக்கிழங்கு - கால் கிலோ,

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

பெரிய வெங்காயம் - 2,

புளிக்காத மோர் - 200 மில்லி.

மோர்க்குழம்பு மசாலா செய்ய:

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

பூண்டு - 5 பல்,

இஞ்சி - ஒரு இஞ்ச் அளவு,

தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,

கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,

துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,

பச்சரிசி - அரை டேபிள்ஸ்பூன்,

மல்லி (தனியா) - 1 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2.

தாளிக்க:

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,

கடுகு - 1 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிது,

கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

சீரகம் - 1 டீஸ்பூன்.

செய்முறை :

வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தயிரை நன்றாக கரைத்து கொள்ளவும்.

ஒரு மணி நேரம் ஊறவைத்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பச்சரிசியுடன் மல்லி (தனியா), பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, தேங்காய்த் துருவல், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து மையாக அரைக்கவும்.

பேபி உருளையை தோல் சீவி இரு துண்டுகளாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழையைச் சேர்த்து வதக்கவும்.

இதில், பேபி உருளையைச் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

பெருங்காயத்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

உருளைக்கிழங்கு நன்றாக வெந்தவுடன் கடைசியாக புளிக்காத மோரைச் சேர்த்து இறக்கவும்.

சூப்பரான பேபி உருளை மோர்க்குழம்பு ரெடி.

குறிப்பு: வெள்ளைப்பூசணி, சுரைக்காய், சௌசௌ, வாழைத்தண்டு, புடலங்காயிலும் மோர்க்குழம்பு செய்யலாம்.


Post Comment

Post Comment