பட்டாணி மசாலா சாதம் :


Posted by-Kalki Teamபள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு பட்டாணி மசாலா சாதம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - ஒரு கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 3

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பட்டாணி - கால் கப்

தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி தழை - சிறிதளவு,

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 3 பல்

சோம்பு - அரை டீஸ்பூன்

செய்முறை :

முதலில் அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, சோம்பை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி, உப்பு, பட்டாணி சேர்த்து மேலும் வதக்குங்கள்.

பட்டாணி நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல், கொத்தமல்லி தழை, உதிரியாக வடித்த சாதம் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான பட்டாணி மசாலா சாதம் ரெடி.


Post Comment

Post Comment