இந்தியாவில் பயணிக்கும் செலவை பாதியாக குறைக்கும் மிகச் சுலபமான தந்திரங்கள்!


Posted by-Kalki Teamபயணிக்கும்போது உங்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்தாலும், ஒரு பக்கத்தில் அய்யோ எவ்வளவு செலவாகுமோ என்ற பயமும் இருக்கும். அதனால் சிலவற்றை நாம் முயற்சிக்காமலே விட்டுவிடுவோம். அல்லது விலை அதிகமாக இருப்பதாக கருதி கைவிட்டுவிடுவோம். இனி அப்படி எதையும் கைவிடவேண்டிய அவசியம் வராது. எப்படின்னு கேக்குறீங்களா இத படிங்க

முடிந்தவரை சுற்றுலாவின்போது மாமிச உணவுகளைத் தவிருங்கள். அது உங்கள் சுற்றுலாவின் செலவில் ஓரளவுக்கு குறைக்கும். அதுமட்டமில்லாமல், சைவ உணவுகள் எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாக இருப்பதால் வயிற்றுக்கோளாறுகளும் வருவதை தவிர்க்கமுடியும்.

நம் நட்புக்களுள் பேரம் பேசுவதில் சிலர் கில்லாடியாக இருப்பார்கள். பொதுவாகவே கடைத்தெருக்களில் இரண்டு மடங்கு விலை கூறுவார்கள். அதை நாம் பேரம் பேசி குறைக்கவேண்டும். உங்களால் பேரம் பேசமுடியாவிட்டால். உங்கள் குழுவில் பேரம் பேசி விலையைக் குறைப்பவர்களின் உதவியுடன் கடைத்தெருவுக்கு செல்லுங்கள்.

வாடகை கட்டணமும் சரி, வேறு சில இடங்களிலும் இவர்களின்

அணுகுமுறை நம்பிக்கையை உருவாக்குவதுடன், விலை அதிகம் இல்லாமலும் பார்த்துக்கொள்ளும்.

நீங்கள் தங்கியிருக்கும் அறையை காலையில் காலி செய்துவிட்டு, இரவில் மீண்டும் அறையைத் தேர்ந்தெடுக்கவும். அது எல்லா இடங்களிலும் சாத்தியப்படாது என்றாலும் முயற்சிக்கலாம்.

குழுக்களாக பயணிக்கும்போது ஆகும் செலவைக் கட்டுப்படுத்தலாம். மேலும் பகிர்ந்துண்ணுதல் உள்ளிட்ட பல செயல்களால் பாதுகாப்பும், அரவணைப்பும் இருக்கும்.

அதிக ஆடம்பரமான நட்சத்திர விடுதிகளென்று போய் ஏமாந்துவிடாதீர்கள். அதற்கு தெருமுனையில் அமைந்திருக்கும் சிறிய ஆனால் பாதுகாப்பான ஓரளவுக்கு வசதிகொண்ட இடங்கள் பரவாயில்லை.

சீசனில் பயணித்தால் சில பொருள்கள் விலை குறைவாக கிடைக்கும் என்று நம்பவேண்டாம். சீசன் நாட்களில்தான் கூட்டம் அதிகரிக்கும். மேலும் கட்டணங்கள் அதிக அளவில் இருக்க வாய்ப்பிருக்கிறது.

பெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் சென்று பொருள்கள் வாங்குவதை விட அங்காடித் தெருக்களில் கலைவண்ணமிக்க பொருள்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

முடிந்த அளவு பணத்தை கையிலே வைத்திருங்கள். உள்ளார்ந்த கிராமங்களில் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துவது குறைவுதான்

முன்கூட்டியே புக் செய்து தேவையில்லாத பதற்றத்தை உணருவதற்குபதில், பொதுப்போக்குவரத்தை உபயோகியுங்கள். அதனால் நிறைய அனுபவம் கிடைக்கும்.Post Comment

Post Comment