கின்னஸ் சாதனை படைத்த பிரான்ஸ் மணமகளின் திருமண ஆடை :


Posted by-Kalki Teamபிரான்ஸ் நாட்டில் மணப்பெண்ணுக்கு 8,095 மீட்டர் நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள திருமண ஆடை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

அந்த திருமண ஆடை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த உடையை ஒரு கட்டுமான நிறுவனம் உருவாக்கியது. அதை 15 தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் 2 மாதங்களாக வடிவமைத்தனர்.

இத்திருமண உடை முந்தைய கின்னஸ் சாதனையை தகர்த்து சாதனை படைத்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு 1203.9 மீட்டர் நீள திருமண உடை தயாரிக்கப்பட்டது. தற்போது அதை விட மிக நீளமாக உருவாக்கப்பட்ட இந்த உடை புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மிக நீளமாக இருக்கும் இந்த உடை பல துண்டுகளாக வெட்டி எடுக்கப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதில் இருந்து கிடைக்கும் பணம் அறக்கட்டளை நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது.Post Comment

Post Comment