சிம்பு உடன் நடிக்க மறுத்த ஹன்சிகா


Posted by-Kalki Teamபாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாராவுக்கும் அப்படத்தின் தயாரிப்பாளரான விஜய டி ராஜேந்தருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது. அதன் காரணமாக ஒரு பாடல்காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார் நயன்தாரா. மாமன் வெயிட்டிங் என்று தொடங்கும் அந்தப் பாடலை படத்திலிருந்து நீக்க மனம் இல்லாமல் சிம்பு உடன் ஆண்ட்ரியாவை ஆட வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

அதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கப்பட இருக்கிறது. மார்ச் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் முதல் பாதியின் பின்னணி இசையை முடித்துவிட்டது. இரண்டாம் பாதிக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இது நம்ம ஆளு படத்தில் சிம்புவும் நயன்தாராவும் நடிக்கிறார்கள் என்பது பழங்கதையாகிவிட்டது. எனவே படத்துக்கு பரபரப்பு கூட்டுவதற்காக இப்படத்தில் கெளரவ வேடத்தில் சிம்புவுடன் நடிக்க ஹன்சிகாவை அணுகி உள்ளனர். 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் 50 லட்சம் தருவதாக ஆசைக்காட்டி உள்ளனர். ஏற்கனவே சிம்பு மீது செம கடுப்பில் இருக்கும் ஹன்சிகா வந்தவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் அவர்களை வழி அனுப்பிவைத்துள்ளார்.


Post Comment

Post Comment