மோகன்லால் மகன் நடிக்கும் படத்தின் உரிமை இத்தனை கோடிக்கு விற்கப்பட்டதா?


Posted by-Kalki Teamமோகன்லால் மகன் பிரணவ் நடிக்கும் ஆதி படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல டிவி சேனல் ரூ.6 கோடிக்கு வாங்கியுள்ளது.

நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் நடித்து வரும் படம் ஆதி.

இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் பிரணவ். இந்தப் படத்தை பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார்.

இதற்கு முன் த்ரிஷ்யம், பாபநாசம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர்தான் இந்த ஜீத்து ஜோஷப்.

பிரணவ் நடிக்கும் இந்தப் படம் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார்.

மேலும், இந்தப் படத்தில் பிரணவ்வுக்கு ஜோடியும் இல்லை, லவ், டூயட்டும் இல்லை. இந்தப் படத்தை மோகன்லாலின் சொந்த நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல சேனல் ஒன்று ரூ.6 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது.

ஒரு அறிமுக ஹீரோவின் பட சேட்டிலைட் உரிமை இவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டுள்ளதை மலையாள திரையுலகினர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

எல்லா புகழும் தந்தை மோகன் லாலுக்கே என்பது நமக்கு தெரியும்.Post Comment

Post Comment